20 ஆனியன் தோசை, 10 முட்டை தோசை...! ஆன்லைன்ல வந்த ஆர்டர்...' 'காசு கேட்டப்போ வந்த டவுட்...' 'இதுல ஏதோ கோல்மால் இருக்கு...' - 'ரூம்' போட்டு யோசிப்பாங்களோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள எம்.ஐ.ஜி காலணி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் ஆன்லைன் வழியாக ஆர்டர் எடுத்து ஸ்விக்கி, சொமோட்டா மூலம் எடுத்த ஆர்டரை டோர் டெலிவரி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு கார்த்திகேயனுக்கு ஒரு நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஆர்மி ஆபிசர் என அறிமுகப்படுத்தி கொண்டு 20 ஆனியன் தோசை, 10 முட்டை தோசை, 5 பிளேட் தயிர் சாதம், 5 நூடுல்ஸ் , 12 ஆப்பிள் ஜூஸ் ஒரு மணி நேரத்தில் வேணும் என்று ஆர்டர் செய்துள்ளார்.
அதோடு விலை விவரம் தொடர்பான மெனுவை, தனது வாட்சப்பிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த வடமாநிலத்தவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் கலந்து பேசிதை வைத்து வட நாட்டுக்காரர் என கூறப்படுகிறது.
ஆர்டரை தயார் செய்த கார்த்திகேயன் பணம் கொடுத்து விட்டு உணவை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த ஆர்மி ஆபிசரோ, 'என்னிடம் கையில் பணம் இல்லை. என்னுடைய கிரெடிட் கார்டு நம்பரை உங்கள் வாட்சப்புக்கு அனுப்பி இருக்கிறேன். நீங்களும் உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்புங்கள் பணம் கிரடிட் செய்து விடுகிறேன்' என கூறியுள்ளார்.
அந்த ஆஃபீஸ்ர் அனுப்பிய கார்டில் சந்தீப் ராவத் என்று இருந்ததால், இதில் ஏதோ தவறு நடப்பது போல உணர்ந்த கார்த்திகேயன், குறுக்கு கேள்விகளை கேட்டுள்ளார்.
அதன்பின் சுதாரித்துக்கொண்ட கார்த்திகேயன், 'டேய் நீ, ஏ.டி.எம் கார்டில், பின்புறம் உள்ள சிவிவி 3 நம்பர் சொல்லுங்கன்னு சொல்ற, பிராடுதானே' என கேட்டவுடன், அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, கார்த்திகேயன் நம்பரையும் பிளாக் செய்துள்ளான்.
இந்நிலையில் தான் செய்து வைத்த உணவு பொருட்களை என்ன செய்வதென்று என எண்ணிய கார்த்திகேயன் இரவு 9 மணிக்கு, தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு சென்று, மருத்துவமனையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் காவலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் உணவு வழங்கி தான் ஏமாற்றப்பட்டதை கவலையுடன் பகிர்ந்துள்ளார்.
அவரின் கதையை கேட்டு, கார்த்திகேயனுக்கு அங்கிருந்த காவலர்கள் பணம் கொடுக்க முன்வந்தாலும், 'எனக்கு பணம் வேண்டாம் உணவு கொடுத்த திருப்தியே போதும்' எனக் கூறி விட்டு பணம் வாங்காமல் கார்த்திகேயன் திரும்பியுள்ளார்.

மற்ற செய்திகள்
