அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே, 74 வயது தமிழ் ஆசிரியரின் மனைவி, தனது கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த கணமே உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குலசேகரன் கோட்டையை பகுதியை சேர்ந்தவர் தமிழாசிரியர் சண்முகவேல் (74). இவரின் அன்பு மனைவி ஜி ஜி பாய் அரசு பள்ளியில் இடை நிலை ஆசிரியையாக பணி புரிந்து ரிட்டையர்ட் ஆனவர்.
50 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதியினர் தங்கள் அன்புக்கு அடையாளமாய் மூன்று ஆண்குழந்தைகளை பெற்றெடுத்து அதில் மூத்த மகனை தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். தனது இரண்டாவது மகனுடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார், மூன்றாவது மகன் தர்மபுரியில் வசிக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழிந்த போதும் மனைவி ஜிஜி பாய் மீது மாறாத அன்பை கொண்டிருந்தார் சண்முகவேல்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சண்முக வேல் திடீரென செவ்வாய்கிழமை (20-04-2021) அன்று மறைந்தார். சண்முக வேல் இறந்த செய்தியை உடனடியாக கூறினால் தாய் ஜிஜி பாயின் உடல்நிலையில் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்று கருதி மகன்கள் அவரிடம் கூறாமல் தவிர்த்து வந்துள்ளனர்.
காலையிலேயே விஷயம் கேள்விப்பட்டு அவர்கள் வீட்டை சுற்றி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததை கண்ட ஜிஜி பாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. மகனிடம் என்ன விஷயம் என்று கேட்க மகன்கள், ஒண்ணுமில்லை அம்மா என்று கூறி சமாளித்து மறைத்துள்ளனர்.
ஆனாலும் நிலைமையை புரிந்து கொண்ட ஜி ஜி பாய் 'அவர் என்ன விட்டு போயிட்டாரா அப்போ?' என்று கத்தியபடி அப்படியே மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்திலேயே ஜிஜி பாய் உயிரை விட்டதால் அவர்களது மகன்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சேர்ந்து இருந்த போதே மனைவியை அன்பாக பார்த்துக் கொண்டது போல, சாகும் போதும் கூட பிரிய முடியாமல் மனைவியை தன்னோடு அழைத்துச்சென்று விட்டாரோ ? என சொந்தபந்தங்கள் கதறி அழுதனர். இந்த நெகிழ வைக்கும் அன்யோன்யம், அதனால் சேர்ந்தே நடந்த இரு மரணங்கள் குலசேகரன்கோட்டை கிராமத்து மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவசர உலகில் அன்பும் காதலும் அரிதாகிவிட்ட நிலையில் இந்த சம்பவம் இன்றைய தலைமுறையின் உறவுகளை, அன்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய விசயமாக உள்ளது.