திரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 08, 2020 12:25 PM

சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Chennai Corona Cases In Kodambakkam TiruViKaNagar Rayapuram

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,547 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து திரு.வி.க. நகரில் 448 பேருக்கும், ராயபுரத்தில் 422 பேருக்கும், தேனாம்பேட்டையில் 316 பேருக்கும், அண்ணாநகரில் 206 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற மண்டலங்களான தண்டையார்பேட்டையில் 184 பேருக்கும், திருவொற்றியூரில் 43 பேருக்கும், வளசரவாக்கத்தில் 205 பேருக்கும், பெருங்குடியில் 22 பேருக்கும், அடையாறில் 107 பேருக்கும், அம்பத்தூரில் 144 பேருக்கும், ஆலந்தூரில் 16 பேருக்கும், மாதவரத்தில் 33 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 15 பேருக்கும், மணலியில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.