சட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவை விட ஐரோப்பிய நாடுகளையே அதிகம் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஒரு கை பார்த்தது. தற்போது அந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக ஆரம்பித்துள்ளது. ஆனால் அமெரிக்கா படாத பாடுபட்டு வருகிறது.

இதுவரை அங்கு கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனவால் மரணம் அடைந்தவர்களில் சுமார் 30% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. தோன்றிய நாள் முதலே அமெரிக்காவில் கொரோனாவின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்பதால் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.(வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது)
இதே நிலை நீடித்தால் பொருளாதார ரீதியாகவும் பெருத்த அடிவாங்கும் என்பதால் தடுப்பூசி நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதில் இத்தாலி, இஸ்ரேல் நாடுகள் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
