'ஹைட்ராக்சிகுளோரோகுயின் கம்பெனியில் கொரோனா...' '26 பேருக்கு தொற்று உறுதி...' இந்தியாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸிற்கு மருந்தாக அளிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கப்படும் குஜராத் ஆலையில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வருகிற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சமீபகாலமாக மிக வேகமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 56,351 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமலும், அப்படியே கண்டுபிடிக்கும் மருந்துகளும் இன்னும் சோதனை அளவுகளிலேயே உள்ளது என்பது உலகறிந்தது. ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை கட்டுப்படுத்த மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோய் தொற்று இருப்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கடன் வாங்கியது உலகறிந்தது
இந்நிலையில் குஜராத், அகமதாபாத்தில் தோல்கா என்னும் இடத்தில் இயங்கி வந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கும் கடிலா மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மருந்து உற்பத்தி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், ஆலையிலும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் கடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியா முழுமையையும் அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய நிகழ்வாக அமைந்துள்ளது