'கங்கை நீரில்...' கொரோனாவை கட்டுப்படுத்துற 'ஒரு' ஆன்டி வைரஸ் இருக்கு...! 'ட்ரீட்மெண்ட்க்கு பயன்படுத்தலாம்...' அமைப்பு கோரிக்கை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 08, 2020 09:08 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையில் வெவ்வேறு வழிமுறைகளில் தங்களின் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

The virus acts against the corona virus in the Ganges waters

இந்நிலையில் அதன் ஒரு குறிப்பாக, கங்கை நதியின் நீரை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகிக்க வேண்டும் என்று மத்திய அரசு இதற்கு முன்பு ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்)  பரிந்துரை அளித்துள்ளது.

அதுல்யகங்கா என்ற அமைப்பானது, கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற ஆன்டி வைரஸ் உள்ளதாகவும், இதனை நாம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்றும்  மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

இந்த அமைப்பின் பரிந்துரையின் பெயரில், இதைக் குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியவை இந்த மருத்துவமுறைக் குறித்த முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டoன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தற்போது பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட சோதனைகளில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், கங்கை நீரை பயன்படுத்தும் திட்டம் குறித்தான முடிவை இப்போது எடுக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது ஐசிஎம்ஆர். மேலும் இனி வரும் காலங்களில் இது குறித்து ஆய்வு நடத்திடவும் வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #GANGA #CORONA