'மார்ச் முதல் டிசம்பர் வரை...' 'இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தைகளின் மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'யுனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 08, 2020 07:55 AM

கொரோனாவை சர்வதேச நோய் பரவலாக அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும் என்றும், இந்த கால கட்டத்தில் மகப்பேறு பெண்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது.

2.1 crore babies to be born in India in 10 months: UNICEF

தாய்மார்கள் தினம் வரும் 10ம் தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி ஐநா குழந்தைகள் நிதியமான (யுனிசெப்) ஒருஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா பாதிப்புள்ள மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும் என எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் மார்ச்  முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 2.1 கோடி  குழந்தைகள் பிறக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜிரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 40 லட்சம் குழந்தைகளும், அமெரிக்காவில் 33 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் எனக் கூறியுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என்றும், போதுமான அளவுக்கு மருதுதவ உபகரணங்கள் மற்றும் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.