'தம்பி அங்க என்ன பாக்குறீங்க'... 'லாக்டவுனால் வீடியோகாலில் நடக்கும் விபரீதம்'... அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 07, 2020 05:36 PM

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பலர், வீடியோ கால் ஆப்களில் பாலியல் மற்றும் அது சார்ந்த தேவைகளில் அதிக ஆர்வம் காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Corona Lockdown : Video call apps are used for Nude Video Chat

கொரோனா வைரஸ் தோற்று காரணமாக உலகமே தற்போது முடங்கியுள்ளது. கியூபாவைத் தவிர்த்து பல வல்லரசு நாடுகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இதனால் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் சேவை மற்றும் ஐடி துறைகளை சேர்ந்தவர்கள் பலர் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் வீட்டிலிருந்து பணிபுரியும் பலர் ஆன்லைனில் பாலியல் உறவுகள் சார்ந்த வீடியோ சேட்டிங்கில் அதிகளவில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. பெரிய நிறுவனங்களின் மீட்டிங்கிற்கு பாலமாக திகழும் 'ஜூம் வீடியோ சேட்டிங் ஆப்', தற்போதைய நேரத்தில் பாலியல் சைட்டாக மாறியுள்ளது என அந்த நிறுவனமே வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கூட கூகுள் வீடியோ மீட்டிங் தளம், வாட்ஸ் ஆப், மற்றும் சில டேட்டிங் ஆப்களில் நிர்வாணமாக மக்கள் சேட் செய்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலியல் உறவு சார்ந்த வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே தற்போது கொரோனா ருத்திரத்தாண்டவம் ஆடி வரும் அமெரிக்காவில் இந்த பாலியல் வீடியோ சேட்டிங் தொடர்பாக அதிக புகார்கள் வருவதாக, எப்பிஐ தகவல் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் போது, இதுபோன்ற எண்ணங்கள் வருவது இயற்கை தான் என்றாலும், உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது என மனநல ஆர்வலர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரத்தில் குழந்தைகளிடம் மொபைல் அல்லது லேப்டாப்பை கொடுத்து விட்டு, நமக்கு தொந்தரவு தீர்ந்தது என பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.