"இதெல்லாம் ட்ரெய்லர் தான்".. தட்டி வீசப்போகும் கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங் . இந்த இடங்கள் தான் ஹாட்ஸ்பாட்..!😱
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இந்த வார இறுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்திருக்கிறார்.
Also Read | 2 நிமிஷ வேலைக்கு கட்டு கட்டா பணத்தை அள்ளி கொடுத்த ஹர்ஷா சாய்.. ஷாக் ஆகிப்போன இஸ்திரி கடைக்காரர்😍.. வீடியோ..!
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே, மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி இருப்பதாகவும் இது அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தமிழகத்தில் வரும் 11 முதல் 14 ஆம் தேதிவரையில் கனமழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,"தற்போது ஆங்காங்கே பெய்துவரும் மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும். இவை இரவு மற்றும் காலை வேளைகளில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவை எல்லாம் வெறும் ட்ரெய்லர் மட்டுமே. உண்மையான பரவலான மழை நவம்பர் 11 முதல் 14 வரை இருக்கும். சென்னை உட்பட வட தமிழக கடற்கரையோர மற்றும் பிற பகுதிகள் ஹாட் ஸ்பாட்டில் இருக்கும். நவம்பர் 1 முதல் 4 வரை பெய்ததை விட அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.