அம்மாடியோவ்..! சென்னையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு நின்ற வாகனங்கள்.. எந்த இடம் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![Heavy traffic in Anna salai in Chennai due to rainfall Heavy traffic in Anna salai in Chennai due to rainfall](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/heavy-traffic-in-anna-salai-in-chennai-due-to-rainfall.jpg)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது நண்பகல் ஒரு மணிக்கு தொடங்கிய கன மழை விடாமல் பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பழம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக்நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், நந்தனத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் அண்ணா சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)