"பெட்ரோல் போட காசு இல்லண்ணா".. போலீஸ் கிட்ட உதவி கேட்ட இளைஞர்.. அடுத்த நிமிஷமே நடந்த நிகழ்வு.. மனசை தொட்ட காவலர்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 02, 2023 05:56 PM

2023 ஆம் ஆண்டு தற்போது தொடங்கி உள்ள நிலையில், உலக மக்கள் அனைவரும் அதனை சிறப்பாக வரவேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் இயங்கி வருகின்றனர்.

TamilNadu traffic police helps youth video melts people

Also Read | 2023 ல கெளம்பி.. 2022-ல் விமானம் தரை இறங்கியதா?.. பயணிகளுக்கு காத்திருந்த வினோத சம்பவம்!!

கடந்த ஆண்டுகளில் கைகூடாத பல்வேறு கனவுகளை இந்த 2023 ஆம் ஆண்டில் எட்டிப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் சோஷியல் மீடியாவில் நாம் வலம் வரும் போதும் நம்மை இன்னும் பாசிட்டிவ் சிந்தனையுடன் செயல்பட வைக்கும் வகையில் நம்மை சுற்றி நடக்கும் நிறைய சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விஷயங்கள் கூட அதிகம் வலம் வருவதையும் நாம் பார்த்திருப்போம்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாம் கடந்து வரும் போது நிச்சயம் பாசிட்டிவ் எண்ணங்களுடன் ஒருவித தாக்கத்தை கூட மனதில் நிச்சயம் கடந்து செல்லும். அந்த வகையில் ஒரு உற்சாகத்தை உண்டு பண்ணும் வீடியோ தான், இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

TamilNadu traffic police helps youth video melts people

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வண்டிமரா தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்படி ஒரு சூழலில், பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார் ராமச்சந்திரன். போக்குவரத்து பணிகளை அவர் கவனித்து கொண்டிருந்த சமயத்தில், இளைஞர் ஒருவர் அவ்வழியில் பைக்கில் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, ராமச்சந்திரனிடம் தனது பைக்கில் பெட்ரோல் இல்லை எனக்கூறி ஐம்பது ரூபாயையயும் அவர் கேட்டுள்ளார்.

TamilNadu traffic police helps youth video melts people

இளைஞரின் தேவை குறித்து அவர் கூறியதும், உடனடியாக உதவவும் முன் வந்துள்ளார் போக்குவரத்து காவலர் ராமச்சந்திரன். இதனைத்  தொடர்ந்து, தன்னிடம் இருந்த 50 ரூபாயை அந்த இளைஞரிடம் ராமசந்திரன் கொடுத்துள்ளார். யார் கேட்டும் தரல சார், நீங்க தந்ததுக்கு ரொம்ப நன்றி சார் என்றும் அந்த இளைஞர் குறிப்பிடுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் சூழலில், பலரும் போக்குவரத்து காவலரின் செயலை எண்ணி நெகிழ்ந்து போய் பாராட்டியும் வருகின்றனர்.

Also Read | டி20 உலக கோப்பை : "Startingல அஸ்வின் நல்லா ஆடுனாரு, ஆனா".. "சாஹல் ஆடி இருக்கலாம்".. லிஸ்ட் போட்ட தினேஷ் கார்த்திக்!!

Tags : #TRAFFIC POLICE #TAMILNADU TRAFFIC POLICE #HELPS #YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TamilNadu traffic police helps youth video melts people | Tamil Nadu News.