'சென்னையில எந்த ஏரியா? சென்னை மொத்தமும் ஏரியா தான் சார் இருக்கு!' .. 'இணையத்தை தெறிக்கவிடும் நிவர் ஸ்பெஷல் மீம்ஸ்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்த 2020ன் இன்னொரு அத்தியாயமாக நிவர் புயல் அனைவரையும் பெரிய அளவில் அச்சுறுத்தி, ஒரு வழியாக கரையைக் கடந்தது.

இதனைத் தொடர்ந்து இணையவாசிகள் தொடர்ச்சியாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். அதன்படி, “சென்னையில நீங்க எந்த ஏரியா சார்? சென்னை மொத்தமும் இப்போ ஏரியாத்தான் சார் இருக்கு!”,
“சார் டிசம்பரைத் தாண்டி அப்படியே ஜனவரில இறக்கிவிட்டுறீங்களா? ”
ஆகிய கேப்ஷன்களுடன் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறந்து வருகின்றன.
இதேபோல், ஏண்டா எவ்ளோ டிரிக்ஸா என்னையும் உள்ள கொண்டு வந்துட்டீங்களே டா எலேய் என ராணிப்பேட்டையும் வேலூரும் புதுவை, சென்னையிடம் பேசுவது போன்று ஒரு மீம்,
கஷ்டப்பட்டு எட்டு மாசமா டிரென்டிங்ல இருக்கேன் ஆனா இப்படி நாலே நாள்ல ஓவர்டேக் பண்ணிட்டு போகுறேய்யா என கொரோனா நிவர் புயலை பார்த்து கேட்பது போன்ற மீம்,
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை- பழனிச்சாமி அறிவிப்பு - ஆனால் இதெல்லாம் நீங்க (ஐடி ஊழியர்கள்) கனவுல கூட நெனச்சு பார்க்க கூடாது புரியுதா என்று ஒரு மீம்,
“சென்னையில் ரியல் எஸ்டேட் விளம்பரம் 20 நிமிஷத்துல ஏர்போர்ட் 15 நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன் 10 நிமிஷத்துல காலேஜ்னு விளம்பரம் பண்ணீங்களே ஆனா 5 மணி நேரம் மழை பெஞ்சா நடுத்தெருவுன்னு சொன்னீங்களாடா?” என்று ஒரு மீம்
என மீம்கள் வைரல் ஆகி வருகின்றன.

மற்ற செய்திகள்
