'எங்க நாட்டு மக்களுக்கு மட்டுமில்ல'... 'இங்க தங்கி வேலை செய்யற'... 'வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி FREE!!!'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ள நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் தடுப்பூசி ஒன்றே அனைவருடைய நம்பிக்கையாக உள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவின் அனைத்து குடிமக்களுக்கும், அங்கு குடியிருப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படாதவர்களுக்கு எதிர்வரும் மாதங்களில் தடுப்பூசி வழங்கப்படுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் டாக்டர் அப்துல்லா ஆசிரி கூறியுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனவும், கோவாக்ஸ் வசதி மூலமாகவும், கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் மூலமாகவும் தடுப்பூசிகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தடுப்பூசி விநியோகத்திற்கான ஒரு விரிவான திட்டம் வரும் வாரங்களில் தயாராக இருக்கும் எனவும் டாக்டர் அப்துல்லா ஆசிரி தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மார்ச் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உத்தரவிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.