அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்க விரும்புறீங்களா?.. 'தடுப்பூசி சுற்றுலா' அறிமுகம்!.. '4 பேக்கேஜ் இருக்கு'!.. டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Nov 24, 2020 07:19 PM

அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கொரோனா தடுப்பூசி சுற்றுலா' திட்டம் ஒன்றை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

mumbai based travel firm launches covid vaccine tourism package

அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, டிசம்பர் 13 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த சுற்றுலா டிராவல்ஸ்  நிறுவனம் ஒன்று  இந்தியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்புவோருக்கு 'தடுப்பூசி சுற்றுலா' என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க அமெரிக்காவிற்கு ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள நான்கு நாள் சுற்றுப்பயணப் பேக்கேஜ்களை கொரோனா வைரஸ் தடுப்பூசியை மையக் கருப்பொருளாகக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

"ஆபத்தான வைரஸ் நோய்க்கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு முதல் ஆளாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது" என அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த நிறுவனத்தின் ஒரு வாட்ஸ்அப் விளம்பர செய்தியில் ஃபைசர் தடுப்பூசி அமெரிக்காவில் விற்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் (தற்காலிக தேதி டிசம்பர் 11), தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தடுப்பூசி வழங்க  தயாராக உள்ளோம்.

ரூ .1.75 லட்சம் செலவில் டெல்லி-நியூயார்க்-டெல்லி விமான டிக்கெட் கட்டணம், மூன்று பகல்  மற்றும் நான்கு இரவுகளுக்கு ஓட்டல் கட்டணம் மற்றும் ஒரு தடுப்பூசி ஆகியவை அடங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

"நாங்கள் எந்த தடுப்பூசியையும் வைத்திருக்கவில்லை அல்லது வாங்கவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்தும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். உங்கள் தேவைகளை மட்டுமே நாங்கள் வழங்குவோம். நாங்கள் இப்போது எந்த முன்கூட்டி வைப்புத்தொகையை சேகரிக்கபோவதில்லை.

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வயது மற்றும் உங்கள் உடல் பிரச்சினைகள் மற்றும் பாஸ்போர்ட் நகலுடன் விண்ணப்பிக்கவும். மீதமுள்ளவை அங்குள்ள சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதிகளின்படி செய்யப்படும்.

அமெரிக்கர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ விற்பனைக்கு அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் உங்களுக்கு தடுப்பூசி கொடுக்க முடியாது" என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mumbai based travel firm launches covid vaccine tourism package | World News.