உலகில் கொரோனா எட்டிப்பார்க்காமல் இருந்த ‘ஒரே’ இடம்.. கடைசியில அங்கேயும் கால் பதிச்சிருச்சா.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை கொரோனா வைரஸ் எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்திலும் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இதுவரை அண்டார்டிகா கண்டத்தை மட்டுமே பரவாமல் இருந்தது. அதற்கு காரணம் மிகக் குறைந்த அளவிலான மக்களே அங்கு தங்கி வருகின்றனர். நிரந்த குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களும், பிற பணியளார்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டு ஆராய்ச்சிக் கூடத்தில் 10 ஆராய்ச்சி நிலையப் பராமரிப்பாளர்களுக்கும், 26 சிலி ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் சிலி நாட்டிலில் உள்ள புன்டா அரினாஸ் (Punta Arenas) பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அண்டார்டிகாவில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆசியா கண்டத்தில் மட்டுமே பரவி வந்த கொரோனா தற்போது அண்டார்டிகா கண்டத்திலும் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.