'நீ விளையாடு...' 'அப்பாவோட உடலை பார்க்க வர வேண்டாம்பா...' மனச கல்லாக்கிய அம்மா...' - அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய முகமது சிராஜ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Dec 26, 2020 10:10 PM

ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி கொண்டிருக்கும் இந்திய அணியின் முகமது சிராஜ் இறந்த தன் தந்தையின் முகம் கூட பார்க்காமல் தன் தாய் நாட்டிற்கு விளையாடி கொண்டிருப்பது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

Indian team bowler Mohammed Siraj father died before match

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தாய்நாடு திரும்பி விட்டார். மேலும்  கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் அணியில் இல்லாத நிலையில் இளம் வீரர் முகமது சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் துருத்தஷ்ட வசமாக ஹைதரபாத்தை சேர்ந்த சிராஜ், ஆஸ்திரேலியா சென்றடைந்த அடுத்த நாளே சிராஜின் தந்தை முகமது கவுஸ் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

சாதாரண ஆட்டோ ஓட்டுநரான முகமது கவுஸ், தன் மகனின் கிரிக்கெட் வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்து, காலையில் ஒரு வேலை மாலையில் ஒரு வேலை இரவில் இன்னோரு வேலை பார்த்து முகமது சிராஜின் கிரிக்கெட் பயிற்சிக்காக பணம் சம்பாதித்தவர். தன் மகனிடத்தில் 'என்றாவது ஒருநாள் தேசத்தை நீ பெருமைப்படுத்துவாய்' என்று சொல்லி சொல்லி வளர்த்தவர்.

தற்போது தந்தையின் கனவு உண்மையான சூழலில் சிராஜின் தந்தை விண்ணுலகை அடைந்துள்ளார். மேலும் தன் தந்தையின் விடாமுயற்சியையும், தன் கனவையும் தொட நினைத்த சிராஜ் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சிராஜின் தாயும், 'நீ கிரிக்கெட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் உடலை கூட பார்க்க வர வேண்டாம்' என்று மனதை கல்லாக்கிக் கொண்டு மகனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

கனத்த இதயத்தோடு பந்து வீசிய முகமது சிராஜ், தன் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளே முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். 15 ஓவர்களை வீசிய சிராஜ் 4 மெய்டன் ஓவர்களை வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் சிராஜ். ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் லாபுசானை (Marnus Labuschagne) முகமது சிராஜால் வீழ்த்தப்பட்ட முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத முகமது சிராஜ் தன் தந்தையின் ஆசையான இந்திய தேசத்துக்காக ஆடி தன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian team bowler Mohammed Siraj father died before match | Sports News.