அச்சுறுத்தி வரும் ‘புதிய’ கொரோனா வைரஸ்.. இந்த 7 அறிகுறி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.. வெளியான முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பரிணாம மாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது பாதிப்புகள் படிபடியாக குறைந்த வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரஸ் வீரியம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக நோய் தொற்று பரவுகிறது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் கடுமையான பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. அதில், ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பதுடன் சேர்ந்து சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.