'12 பேர் பலி!'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு! - முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (2020 டிசம்பர் 24) 1,035 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து115 ஆக உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று 296 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மொத்தமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 9 ஆயிரத்து 217 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
தவிர, இன்று மட்டும் 1,120 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதை அடுத்து, இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 89 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ: ‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா?’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்? தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை!
அத்துடன் இன்று கொரோனாவால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவால் மொத்தமாக தமிழகத்தில் 12 ஆயிரத்து 36 பேர் பலியாகியுள்ளனர்.

மற்ற செய்திகள்
