'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவாரண தொகையை நேரில் சென்று வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரேசன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வருகிற 22-ம் தேதி முதல் ரேசன் குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.

மற்ற செய்திகள்
