'இத நிறைய பேர் என்கிட்ட கேக்குறாங்க'...'காங்கிரஸ் மகளிர் தின விழாவில்'...'குஷ்பு' சொன்ன ருசிகர பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது அழகு ரகசியம் குறித்து பலர் கேட்கும் நிலையில், அதற்கு காங்கிரஸ் மகளிர் தின விழாவில் குஷ்பு ருசிகர பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அகில இந்திய சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, நரேந்திர மோடி தனது சுயவிளம்பரத்துக்காக ரூ.4,800 கோடி செலவு செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது. அப்படி நடந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி தான். மேலும் என்னுடைய அழகு ரகசியம் என்ன? என்று பலர் கேட்கிறார்கள்.
அதற்கு நான் இப்பொது பதில் கூறுகிறேன், ''நான் தினமும் காலையில் எழுந்தவுடன், ‘கண்ணாடியை பார்த்து, நீ அழகு டா செல்லம் என்று என்னை நானே வர்ணித்து கொள்வேன். இது தான் என் அழகு ரகசியம். இதேபோன்று எல்லா பெண்களும் தங்களை ரசிக்க வேண்டும்'' என கூறினார்.
