சாலைகளில் 'சங்க' இலக்கியம்...! 'நமக்கு பின்னாடி வர சந்ததிகள் இத பார்த்து தெரிஞ்சுக்கிடுவாங்க...' 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் மலர் 'சூடிய' நெடுஞ்சாலைத்துறை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 11, 2020 12:07 PM

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை எழுதிவைத்துள்ளனர்.

Tamil Flowers Name For Meghamalai Road Curves

தேனி மாவட்டம் அருகே உள்ள சுற்றுலா தலம் மேகமலை, வார இறுதி நாள்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சாலை ஓரங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை எழுதிவைத்துள்ளனர். மேகமலை அடிவாரமான தென்பழனியிலிருந்து 34 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால், மேகமலையை அடையலாம்.

மேகமலை, வன உயிரினச் சரணாலயம் என்பதால், விலங்குகள் கடக்கும் இடம் ஆகும். மேலும் ஆபத்தான வளைவுகள் இருப்பதால் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மேகமலைச் சாலையில், ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை போர்டில் எழுதிவைத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. குறிப்பாக, வஞ்சிப்பூ கொண்டை ஊசி வளைவு, வெட்சிப்பூ கொண்டை ஊசி வளைவு, மகிழம்பூ கொண்டை ஊசி வளைவு என 18 கொண்டை ஊசி வளைவுக்கும் மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மரபு இலக்கிய பெயர்களை சூட்டப்பட்டுள்ளதால் வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கும், நம்முடைய குழந்தைகளுக்கும் சங்க இலக்கியத்தின் பெருமையை விளக்கிக் கூற முடியும் என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

Tags : #FLOWERNAME #ROAD