'வேகமாக வந்த முதல்வரின் கான்வாய்'... 'திடீரென காரை நிறுத்த சொன்ன ஸ்டாலின்'... 'அந்த பொண்ண வர சொல்லுங்க'... நெகிழ வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் சென்னையைத் தவிரக் கோவை, மதுரை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
நேற்று காலை திருப்பூர், சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை கோவை மாவட்டம் சென்றார். கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் கூடுதலாக 820 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதிதாக 360 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து ஆய்வை முடித்துக் கொண்டு குமரகுரு கல்லூரியிலிருந்து முதல்வர் கிளம்பிய நிலையில், முதல்வரின் வாகன அணிவகுப்பு (கான்வாய்) குமரகுரு கல்லூரியின் வாயிலில் வேகமாக வந்தது. அப்போது முதல்வர் திடீரென தனது வாகனத்தை நிறுத்த சொன்னார்.
பின்னர் அங்குத் தனது குடும்பத்தோடு நின்று கொண்டிருந்த பெண்ணை வரச் சொன்ன முதல்வர் அவரது குறைகளைக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த மனுவையும் வாங்கிக் கொண்டார். தங்களைப் பார்த்தவுடன் முதல்வர் வாகனத்தை நிறுத்தி கோரிக்கை மனுவை வாங்கியது அந்த பெண்ணின் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் தனது வாகனத்தை திடீரென நிறுத்தியதால் அவரது பாதுகாப்பது அதிகாரிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.குமரகுரு கல்லூரி நுழைவு வாயிலில் ஒரு எளிய மக்களிடம் கோரிக்கை மனு பெறும் மக்கள் முதல்வர் @mkstalin அவர்கள்..
தொடரட்டும் மக்கள் பணி
வாழ்க வளர்க… 😍🙏 pic.twitter.com/ypj5S29Hl0
— Marikannan DMK (@maree_kannan) May 20, 2021

மற்ற செய்திகள்
