"போங்க தம்பி, போய் 'பவுலிங்' பண்ணுங்க.." ஆக்ரோஷமான 'ஸ்ரீசாந்த்'.. மறுகணமே 'தோனி' செய்த 'காரியம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்காக சில காலங்கள் ஆடியவர் கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் (Sreesanth). இந்திய அணிக்காக இவர் ஆடிய காலகட்டங்களில், மிகவும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர்.
களத்தில் எப்படிப்பட்ட வீரரை அவுட் எடுத்தாலும், அதனை ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தான் ஸ்ரீசாந்த் கொண்டாடுவார். அப்படிப்பட்ட ஒரு பந்து வீச்சாளரை தேர்ந்த முறையில் முன் நடத்திச் செல்ல, அந்த சமயத்தில் தோனி போன்ற ஒரு கேப்டன் தான் தேவைப்பட்டார். பல போட்டிகளில், ஸ்ரீசாந்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டார் தோனி (Dhoni).
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா (Robin Uthappa), தோனி மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடையே நடந்த சம்பவம் ஒன்றை தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையை வென்ற பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் ஒன்றில் மோதியது.
அப்போது நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி பேசிய உத்தப்பா, 'டி 20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணியை ஒரு நாள் போட்டி ஒன்றில் எதிர்கொண்டோம். அப்போது ஹசி அல்லது சைமண்ட்ஸ் ஆகிய இருவரில் யாரோ ஒருவர், நான் ஸ்ட்ரைக் பக்கம் கிரீஸுக்குள் செல்ல முயன்றனர். அந்த சமயத்தில், ரன் அவுட் செய்த ஸ்ரீசாந்த், நடுவரிடம் அவுட் என கத்தி அப்பீல் செய்தார்.
இது அவுட்டில்லை என்பதால், ஸ்ரீசாந்தின் ஆக்ரோஷத்தைக் கண்ட தோனி, வேகமாக ஸ்ரீசாந்த் அருகே வந்து, "போங்க பிரதர், போய் பந்து வீசுங்கள்" என கூறினார். உண்மையில், ஸ்ரீசாந்தை மிகச் சிறப்பாக கையாண்டவர் யார் என்றால் அது தோனி மட்டும் தான்' என பழைய நினைவுகளை உத்தப்பா தற்போது பகிர்ந்துள்ளார்.