VIDEO: முதல்வர் ஸ்டாலினிடம்... போனிலேயே கண்ணீர்விட்டு கதறி அழுத சீமான்!.. இதயத்தை ரணமாக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்.

சிவகங்கை மாவட்டத்தில் அரணையூர் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு, தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அதற்கு பச்சைக்கொடி காட்டியவர், தந்தை செந்தமிழன்.
விவசாயக் குடும்பம் என்பதால் அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து, மகன் சீமானை சென்னைக்கு வழியனுப்பி வைத்தவர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீமானின் சொந்த ஊரான அரணையூரில் செந்தமிழன் இன்று (13.5.2021) உடல் நலக் குறைவால் காலமானார்.
அதைத் தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தந்தையின் இறுதி அஞ்சலிக்காக சீமான் தனது சொந்த கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கே, அவருடைய தந்தையின் பூத உடலைப் பார்த்து கண் கலங்கி நின்று கொண்டிருந்த சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் அலைபேசி மூலம் சீமானை தொடர்பு கொண்டார்.
அப்போது சீமானுக்கு ஆறுதல் கூறத் தொடங்கியதும், துக்கம் தாங்கமால் உணர்ச்சி வசப்பட்டு முதல்வர் ஸ்டாலினிடம் போனிலேயே சீமான் கதறி அழுதார். அந்த காட்சிகள் காண்போர் மனதை கலங்கடிக்கச் செய்கின்றன.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
