பாடல், நடனம் மூலம் பாடம் நடத்தும் அங்கன்வாடி ஆசிரியை.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடல், நடனம் மூலமாக பாடம் எடுத்துவருகிறார் ஆசிரியை ஒருவர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையம்
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடல், நடனம் மூலமாக ஆசிரியை ஒருவர் பாடம் எடுக்கும் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தைகள்
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை காட்டிலும் பள்ளிகளிலேயே அதிக காலத்தை செலவிடுக்கின்றனர். இதனாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப வகுப்புகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அறத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லித்தரவேண்டிய அவசியமும் இருக்கிறது. அந்த வகையில் அதனை குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாக சொல்லிக்கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சங்கரலிங்கபுரத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் நடனம், பாட்டு என குழந்தைகளுக்கு எளிமையான வகையில் பாடங்களை நடத்திவருகிறார். மதுரை செல்லூரை சேர்ந்தவர் ஜெயலானி. இவர் கடந்த 5 வருடங்களாக இதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குழந்தைகளுக்கு தன்னுடைய கலை திறமை மூலமாக பாடங்களை கற்றுக்கொடுத்து வருகிறார் இவர்.
வீடியோ
வண்ணங்கள், எண்கள் மற்றும் எழுத்துக்கள் என அடிப்படை கல்வியை வித்தியாசமான முறையில் பயிற்றுவித்து வரும் இவருடைய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, ஆரம்பத்தில் 10 மாணவர்கள் மட்டுமே இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்றுவந்த நிலையில் இந்த ஆசிரியையின் முயற்சியால் தற்போது 25 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
