50 வருடம் ஒரே பள்ளியில் பணியாற்றிய டீச்சர்.. RETIRE-ஆன நாள்ல மாணவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்50 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியருக்கு அவர் பணி ஓய்வு பெறும் நாளில் அவரது மாணவர்கள் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பொதுவாகவே மக்கள் தங்களது ஆசிரியர்களை மறப்பதில்லை. அதுவும் குறிப்பாக பள்ளிக்கால ஆசிரியர்கள் குறித்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் மனிதர்களுக்கு ஞாபகம் இருக்கத்தான் செய்கிறது. கல்வியின் ஆரம்ப விதையை நமது நெஞ்சில் ஆழ விதைத்த அந்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மத்தியில் பிரத்யேக இடம் இருக்கிறது. அப்படி ஒரே பள்ளியில் 50 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை ஒருவர் பணி ஓய்வு பெறும் நாளில் பிரம்மாண்ட வரவேற்பை எதிர்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஓய்வு
அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 50 வருடங்களாக ஆசிரியையாக இருந்த தனது அம்மா இன்றுடன் ஓய்வு பெறுவதாக கேத்ரீன் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த பதிவில் கேத்ரீன்,"இந்த பள்ளியில் தனது 22 ஆம் வயதில் ஆசிரியையாக பயணத்தை என் அம்மா துவங்கினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேத்ரீனின் தாய், பள்ளிக்குள் நுழைந்த உடன் மாணவர்கள், பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், பிற அதிகாரிகள் மற்றும் சக ஆசிரியர்கள் வழிநெடுகிலும் நின்றபடி கைதட்டி ஆராவாரம் செய்கின்றனர். இந்த சர்ப்ரைஸ் நிகழ்வால் மனம் நெகிழ்ந்துபோன அந்த ஆசிரியை கண் கலங்கியபடி அனைவரையும் பார்க்கிறார்.
வாழ்த்துக்கள்
மேலும், பணி ஓய்வு பெறும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் நன்றி கூறுகின்றனர். கேத்ரீன் இந்த பதிவில்," எனது அம்மா இதே பள்ளியில் 50 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இந்த வளாகத்திற்கு அவர் வருகைதரும் கடைசி நாள் இதுதான். அதற்காக சக ஆசிரியர்கள், மாணவர்கள் அளித்த வரவேற்பு இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," ஓய்வு பெறுவதற்கு வாழ்த்துக்கள் அம்மா" என்றும் கேத்ரீன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 50 வருடங்கள் ஒரே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோகோஷம் அளித்து பிரியாவிடை அளித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
