பாடித்திரிந்த பறவைகளே.. "இது 96 இல்ல 66".. REUNION நிகழ்ச்சியில் மேடையேறிய வயதான பெண்மணிகளின் ஸ்டெப்ஸ் ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 02, 2023 05:45 PM

இன்றைய காலகட்டத்தில் நாம் இணையத்தில் அப்படியே வலம் வந்தாலே நம்மைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Eledrly Female doctors dance for trend song in college reunion

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஸ்டார்க் கையில் உருவான காயம்?... கிரிக்கெட் போட்டிக்கு நடுவே பரபரப்பு!!.. ஆனாலும் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

ஒருபுறம் நாள்தோறும் உலகில் நடக்கும் நடப்புகள் பற்றிய செய்திகள் பகிரப்பட்டு வரும் சூழலில், மறுபுறம் நம்மைச் சுற்றி நடைபெறும் மற்ற சில விஷயங்களும் வைரல் ஆவதை கவனிக்கவும் ஒரு கூட்டம் உள்ளது. இந்த வைரலான விஷயம் என்பது இயல்பாக நடைபெறும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு வேடிக்கை நிறைந்தோ, அதிர்ச்சி நிறைந்தோ அல்லது வினோதமாகவோ தோன்றும் வகையில் அவை நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக கூட மாறலாம்.

இப்படி நாள் தோறும் எக்கச்சக்க வீடியோக்களும், செய்திகளும் தொடர்ந்து இணையத்தில் கொட்டி கிடப்பதால், பலரும் நிறைய நேரத்தை சமூக வலைத்தளங்களிடம் உலவிடவும் செய்கின்றனர்.

வயது தடையில்லை

இந்த நிலையில் தற்போது அப்படி ஒரு வீடியோ தொடர்பான விஷயம் தான் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக எந்த ஒரு வேலையும் செய்வதற்கும் வயது ஒரு தடை இல்லை என்று பலரும் கூறுவார்கள்.

Eledrly Female doctors dance for trend song in college reunion

Images are subject to © copyright to their respective owners.

சிலர் இந்த விஷயத்தை வேடிக்கையாக கடந்து சென்றாலும் மறுபக்கம் நிச்சயம் அப்படி இல்லை என்பது போன்று நிரூபிக்கும் வகையில் கூட சில விஷயங்கள் அரங்கேறும். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் ஏராளமான செய்திகள் அடிக்கடி பேசு பொருள் ஆர்வத்தையும் நாம் கவனித்திருப்போம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட 100 வயது நெருங்கும் பாட்டி ஒருவர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட விஷயம் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. இதே போல சுமார் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் அந்தரத்தில் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த செய்திகளும் அதிக கவனம் பெற்று இருந்தது.

டான்சில் அசத்திய வயதான பெண்கள்

இப்படி வயது என்பது எந்த ஒரு விஷயத்திற்கும் வரையறை செய்ய முடியாது என்பதற்கு உதாரணமாகவும் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் செய்துள்ள விஷயமும் அதிகம் கவனம் பெற்று வருகிறது 

Eledrly Female doctors dance for trend song in college reunion

Images are subject to © copyright to their respective owners.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் கடந்த 1966 ஆம் ஆண்டு படித்த மாணவிகள், சமீபத்தில் நடந்த ரியூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சுமார் 75 வயது வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் மலையாளத்தில் சமீபத்தில் ஹிட்டான "பாலா பள்ளி திருப்பள்ளி" என்ற பாடலுக்கு மேடையில் நடனமாடி அசத்தவும் செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவர் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், புடவையில் அவர்கள் மிக எனர்ஜியுடன் மேடையில் நடனம் ஆடி இருந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

Also Read | "கிட்னி விற்பனைக்கு".. வீட்டு அட்வான்ஸ் கொடுக்க இளைஞர் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் கடைசி லைன்!!

Tags : #KERALA #FEMALE DOCTORS #DANCE #ELEDRLY FEMALE DOCTORS DANCE #COLLEGE REUNION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Eledrly Female doctors dance for trend song in college reunion | India News.