அட என்னங்க சொல்றீங்க...? தோனி இதுவரைக்கும் 'அந்த விஷயத்தை' பண்ணதே இல்லையா...! - KKR அணியுடன் விளையாடியபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று மும்பையில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் சிஎஸ்கே அணியும் போட்டியிட்டது. நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த பவுண்டரியையும் நேற்று கேப்டன் தோனி ஆடியது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அல்வா போல மாறியது.
மும்பை மைதானத்தில் முதலில் பேட் செய்ய இறங்கிய நம்முடைய சென்னை அணி தீபொறி பறந்தார் போல பந்துகளை பறக்கவிட்டு 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை விளாசியது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நேற்று நடந்த மேட்சில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இதற்கு முந்தைய ஆட்டத்தில் எல்லாம் நரைனின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் தோனி அடித்ததில்லை. இதுவரை நரைனின் 63 பந்துகளை எதிர்கொண்டும் ஒருமுறையும் தோனியால் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடிந்ததில்லை
ஆனால் இந்த ஆட்டத்தில் தோனி ஒரு பவுண்ட்ரியாவது அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17-வது ஓவரை நரைன் வீசினார். நரைனின் கடைசி ஓவர் என்பதால் மீதமுள்ள மூன்று பந்துகளில் தோனி பவுண்டரி அடிப்பாரா என ரசிகர்கள் எதிபார்த்தார்கள். முதல் பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார்.
அப்போது ஓவரின் 5-வது பந்தை நோ பாலாக வீசினார் நரைன். இதனால் அடுத்த பந்தில் பேட்டைச் சுழற்றினார் தோனி. பந்து பேட்டின் முனையில் பட்டு தேர்ட் மேன் பகுதியில் பவுண்டரி சென்றது.
தல தோனியிடம் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பவுண்ட்ரியானது நேற்று அடிக்கப்பட்டது. அதோடு சி.எஸ்.கே வெற்றியினால் தொடச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.