"நமக்கு எப்போ இதெல்லாம் நடந்துருக்கு.." 'டாஸ்' போடுற நேரத்துல 'கோலி' பண்ண 'சேட்டை'.. சத்தமாக சிரித்த 'சாம்சன்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த சீசனின் 16 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி (Virat Kohli), பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதனிடையே, இந்த போட்டிக்காக டாஸ் (Toss) போடும் சமயத்தில், நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் முன்னிலையில், டாஸ் போடப்பட்ட நிலையில், விராட் கோலி டாஸை வென்றார். ஆனால், மாறாக ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் டாஸ் வென்றதாக, அவரைத் தேர்வு செய்யும் படி, குழப்பத்தில் கோலி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, டாஸில் தான் வெற்றி பெற்றதை உணர்ந்த கோலி சிரித்துக் கொண்டே, 'ஹேய், நான் தான் டாஸ் வெற்றி பெற்றேன்' என கூறினார். இதனைக் கேட்ட சஞ்சு சாம்சன் மற்றும் பிஷப் ஆகியோர் சத்தமாக சிரித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்காக பல தொடர்களை வென்று கொடுத்தாலும், இந்த டாஸில் வெற்றி பெறுவது என்பது, கோலிக்கு கடினமாக ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு உதாரணமாக,கடந்த இங்கிலாந்து தொடரின் போதும் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே கோலி டாஸ் வென்றிருந்தார்.
"I'm not used to winning tosses" 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
இதனால் தான், இன்றைய ஐபிஎல் போட்டியில், டாஸ் சமயத்தில், அதனை தான் வென்ற போதும், எப்படியும் டாஸ் நாம் வென்றிருக்க மாட்டோம் என்ற நினைப்பில் கோலி நின்றதும், அதன் பின் சுதாரித்துக் கொண்டு, தான் டாஸ் வென்றதை கோலி உணர்ந்ததும் தொடர்பான வீடியோக்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.