'என்ன மச்சி பாட்டில்க்கு உள்ள என்னமோ மிதக்குது'... 'ஒரு நிமிடம் ஆடி போன குடிமகன்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீர்காழியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் செத்த தவளை கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் மது கடைகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்திலும் மது கடைகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு மதுபான கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மது பாட்டில் வாங்கியுள்ளார்.
பின்னர் வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றி விட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபர், மதுவை கீழே ஊற்றிவிட்டு மது பாட்டிலை பார்த்தபோது, பாட்டிலுக்குள் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ந்து போனார். இதையடுத்து கீழே ஊற்றிய மதுவை பார்த்து அந்த நபர் புலம்பியபடி இருந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த நபர், இதுகுறித்து அந்த மதுபான கடைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலைக் கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. மதுபாட்டிலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கூறும்போது, இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றும் ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது காலாவதி தேதி ஆகியவற்றைப் பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் ரம் போன்ற மது வகைகளில் நிறுவனங்களில் இருந்து வரும்போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்று பரிசோதித்த பின்னரே வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
