இந்த 'ரெண்டையும்' எடுத்துட்டு வந்தா 'மட்டும்' தான் தருவோம்... அதிரடியாக 'அறிவித்த' மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மே ஏழாம் தேதி முதல் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் என்னென்ன கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 16 கடைகள் மட்டுமே வரும் ஏழாம் தேதி முதல் செயல்படும்.
அதே போல மதுக்கடைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் அவர்களின் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐம்பது நபர்களுக்கு டோக்கன் அளித்து அவர்களுக்கு மதுபானம் கொடுத்த பின்னரே அடுத்த ஐம்பது பேருக்கு டோக்கன் கொடுத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறடி தூரத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் மதுக்கடைகள் திறக்காது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அங்கிருந்து காஞ்சிபுரம் வந்து மதுபானம் வாங்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
