'இவ்வளவு நாள் நீ எங்கய்யா இருந்த'... 'ஜெகனை' கொண்டாடும் நெட்டிசன்கள்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 05, 2019 01:13 PM

ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல்,அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் வைரலாகி வருகிறது.அந்த வகையில் கேன்சர் நோயாளிக்கு உதவ துரிதமாக உத்தரவிட நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

CM Jagan Mohan Reddy stepped in to help cancer patient video goes vira

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது விமன நிலையத்திற்கு அருகில் இளைஞர்கள் சிலர் பதாகையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.இதனை கவனித்த ஜெகன், உடனடியாக தனது கான்வாயை நிறுத்தச் சொன்னார்.தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்த அவர் கூடியிருந்த இளைஞர்களிடம் என்ன பிரச்சனை எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.

இதற்கு அங்கிருந்த இளைஞர்கள் ''தங்களது நண்பரான நீராஜ், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு 25 லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் ஆனால்,குடும்ப வறுமை காரணமாக சிகிச்சை பெற பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறினார்கள்.உடனே அங்கிருந்த மாவட்ட ஆட்சி தலைவரிடம், அரசு சார்பில் இவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த துரித நடவடிக்கை அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.

ஜெகன் மோகன் அங்கிருந்த இளைஞர்களிடம் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன்கள்,ஜெகன் மோகனை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : #Y S JAGAN MOHAN REDDY #AP CHIEF MINISTER #CANCER PATIENT