"FIRST மீட்டிங் இப்படிதான் இருந்தது".. சீமானுடன் காதல் மலர்ந்தது எப்படி? மனைவி சொன்ன சுவாரஸ்யம்.!.. 😍 வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது முதல் சந்திப்பு குறித்து பேசியுள்ளனர்.
Also Read | 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..
தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில் Behindwoods 'மக்களுடன் சீமான்' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கலக்க போவது யாரு T.சரவண குமார் மற்றும் அசார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் சீமான் கலந்துகொண்டு தனது வாழ்க்கை அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது, தனது மனைவி பற்றி பேசிய சீமான், தன்னுடைய உயிர் என்றும் வீட்டின் குலவிளக்கு என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேடையில் சீமான் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய மனைவி கயல்விழி உள்ளே வர, சட்டென்று ஆச்சர்யமடைந்த அவர் மகிழ்ச்சியுடன் கரம்கூப்பி அவரை வரவேற்றார். இதனை தொடர்ந்து, தங்களுடைய முதல் சந்திப்பு பற்றியும், பின்னர் அது காதலாக மாறிய விதம் குறித்தும் இருவரும் பேசினர்.
முதலில் பேசிய கயல்விழி,"முதல் தடவை என்னை பார்த்தப்போ உட்காருங்கனு சொன்னார். அதுக்கு அப்புறம் என்னை பார்த்தே பேசல. அப்புறம் வாங்க போகலாம்-னு கட்சி அலுவலகத்துக்கு உள்ளே கூட்டிட்டு போனாரு. அங்க நிர்வாகிகள் இருந்தாங்க. கூட்டத்தை நான் பார்த்துட்டே இருந்தேன். அதுக்கு அப்புறம் கூட்டிட்டு போய் சிறப்பா குடல் குழம்பு சாப்பாடு போட்டாரு. நாளைக்கு வந்துடுங்க-னு சொல்லி அனுப்பி வச்சாரு. அதுக்கு பிறகு நான் ரொம்ப நாள் பேசாம இருந்தோம். அப்புறமா பேசி, எங்களுக்குள்ள புரிதல் வந்து அதுவே காதலாவும் வளர்ந்திடுச்சு" என்றார்.
இதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த சீமான் பேசுகையில்,"திருச்சில நடந்த கூட்டத்துல சந்திச்சோம். அப்போ குடிமை பணிக்கு அவங்க படிச்சிட்டு இருந்தாங்க. இப்போகூட விளையாட்டா 'நான் படிச்சு ஐஏஎஸ் ஆகிருப்பேன். என் வாழ்க்கையே கெடுத்துட்டன்னு' சொல்லுவாங்க.. இனி எங்க ஆகுறது? கயல்விழி காளிமுத்து-னு சொன்னாலே பிரச்சனை. அதுவும் கயல்விழி சீமான்-னா கதை முடிஞ்சது. எனக்கு தமிழ் மீதும், விடுதலை மீதும் ஆர்வம் இருந்தது போலவே, அவங்களுக்கும் மொழி உணர்வும் விடுதலை குறித்த பார்வையும் இருந்துச்சு. தமிழ் தான் எங்களை இணைச்சிடுச்சு" என மகிழ்வுடன் குறிப்பிட அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆராவாரம் செய்தனர்.
Also Read | "இத திருடிட்டு போய் நான் பட்ட பாடு இருக்கே".. கோவில் நகைகளை திருடிய திருடனின் உருக்கமான கடிதம்!