திடீரென மயங்கி விழுந்த சீமான் .. ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து சென்ற தொண்டர்கள்.. பரபரப்பு வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, இன்று அங்கிருக்கும் வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சீமான்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதி மக்களை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய சீமான், வீடுகள் அகற்றப்படுவது குறித்து பயப்பட வேண்டாம் எனவும், நம்பிக்கையோடு இருக்கும்படியும் கூறினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான்," ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மயக்கம்
செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென சீமான் மயங்கி விழ, அங்கு இருந்த அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கட்சி தொண்டர்கள் மயங்கி விழுந்த சீமானுக்கு முதல் உதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே, சீமானுக்கு உடல்நிலை சீரானதை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை திருவொற்றியூரில்
பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சீமான்,ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை பெற்று தனது காரில் புறப்பட்டு சென்றார்.. pic.twitter.com/F8b14vR3jm
— ஷேக்பரித் 👉 🖤♥️ (@FareethS) April 2, 2022