சீமானுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!.. மீளாத்துயரில் நாம் தமிழர் கட்சி!.. நொறுங்கிப் போன தம்பிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்.

சிவகங்கை மாவட்டத்தில் அரணையூர் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு, தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அதற்கு பச்சைக்கொடி காட்டியவர், தந்தை செந்தமிழன்.
விவசாயக் குடும்பம் என்பதால் அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து, மகன் சீமானை சென்னைக்கு வழியனுப்பி வைத்தவர்.
மேலும், சீமான் தந்தை செந்தமிழனுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது அதீத ஈடுபாடு இருந்தது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீமானின் சொந்த ஊரான அரணையூரில் செந்தமிழன் இன்று காலமானார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
