‘பொள்ளாச்சி விவகாரம்’.. போராட்டம் நடத்திய மாணவர்கள்.. கைது செய்ய முயன்ற காவல்துறை.. அரணாக காத்த மாணவிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 14, 2019 02:41 PM

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்திய போரட்டத்தில் போலிஸார் கைது முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

College students protest in pollachi


பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் அடிப்படையில் பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் மற்றும் அவரது நண்பர்களான சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்தனர்.

இதில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் ஒருங்கிணைந்து பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போரட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லச் சொல்லி போலிஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலிஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்களை காக்க மாணவிகள் ஒருவருக்கொருவர் கை கோர்த்து அரணாக நின்றனர்.

Tags : #POLLACHISEXUALABUSE #POLLACHICASE #POLLACHIABUSE #STUDENTS #PROTEST