'கனமழை' எதிரொலி.. 'இந்த' மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 'நாளை' விடுமுறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 21, 2019 07:43 PM
அதிக கனமழை காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : #HEAVYRAIN #RAIN
