'ரகசிய' தகவலால் இறுகிய பிடி... தலைமறைவான காவலர் 'முத்துராஜை'... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிசிஐடி போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மற்றொரு நபரான காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தார்.
இதனால் அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் தலைமறைவான காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக அவரது பைக்கை சிபிசிஐடி போலீசார் ஒட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றி இருந்தனர். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
