“சாதாரண குடும்பத்துல இருந்து வந்தேன்.. இப்டி ஆகும்னு நெனைக்கல! எதிர்காலத்த நெனைச்சாதான்”.. கதறி அழும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 03, 2020 09:15 PM

சாத்தான்குளம் வியாபாரிகளும் தந்தை மகன்களுமான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Sathankulam case SI Balakrishnan CBCID Custody fear about future

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், விசாரணையின்போது மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன், “சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்றபோது விசாரணைக்கு கூட்டிட்டு போறவங்களை எப்பவும் எப்படி ட்ரீட் பண்ணுவோமோ, அதே மாதிரிதான் தாக்கினோம். ஆனா அவங்களுக்கு இப்படி நடக்கும்னோ, இதுக்காக நான் கைதாவேன்னோ கொஞ்சம் கூட நினைக்கல” என்று வருந்தியதாக கூறப்படுகிறது.

மேலும், “போலீஸ் ஸ்டேஷன்ல இருக்குற ஒவ்வொருவருக்கும் யாராவது ஹெல்ப் பண்ண இருக்காங்க. ஆனா நான், சாதாரணக் குடும்பத்துல இருந்து இந்த வேலைக்கு வந்தேன். காவலரா வேலைக்கு சேர்ந்து, அப்புறம் எஸ்ஐ எக்ஸாம்க்கு போய் பணியில் சேர்ந்தேன். இப்ப என்னோட எதிர்காலத்தை நெனைச்சாதான் பயமா இருக்கு” என தழுதழுத்த குரலில் பாலகிருஷ்ணன் பேசியதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிப்பதாக விகடன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sathankulam case SI Balakrishnan CBCID Custody fear about future | Tamil Nadu News.