சசிகலா விடுதலை குறித்து... பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் 'அதிரடி' அறிவிப்பு!.. 'ரிலீஸ் 'இப்படி' தான் இருக்கும்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சசிகலா விடுதலை நாளான அன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது.
இதனிடையே சசிகலா விடுதலை நாளான அன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில்
சசிகலா விடுதலை செய்யும் போது, அவரை அழைத்துச் செல்ல ஏரளாமான தொண்டர்கள் வரலாம் என்பதால் அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அவரது தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அவரது பாதுகாப்பை கருதி மற்ற கைதிகளை போல் இரவு 7 மணிக்கு இல்லாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம்.
அவரை கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.
சசிகலா விடுதலை நாளன்று சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்யவும் சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
