'முதலில் மும்பை... இப்போது கர்நாடகா'!.. அடுத்தடுத்த சர்ச்சைகள்!.. நடிகை கங்கனா ரணாவத் மீது 'புதிய' வழக்குப்பதிவு!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Oct 14, 2020 04:15 PM

விவசாயிகளின் போராட்டம் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

kangana ranaut anti farmer tweet karnataka police files complaint

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிஏஏ தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்தவர்களே தற்போது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து, வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்ட நீதிமன்றம் கங்கனா மீது வழக்குப்பதிய உத்தரவிட்டது. இதையடுத்து, கங்கனா மீது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kangana ranaut anti farmer tweet karnataka police files complaint | Tamil Nadu News.