'அதிரடி திருப்பம்!' - பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா விவகாரம் தொடர்பான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சசிகலா பெங்களூரு சிறையில் உள்ளார். இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தாம் செலுத்த வேண்டிய 10.10 கோடி ரூபாய்க்கான காசோலையை அவருடைய வழக்கறிஞர் நீதிபதி சிவப்பா முன் செலுத்தினார். முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
அதேசமயம் சசிகலா செலுத்த வேண்டிய தொகையான 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறை துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் அவர் விரைவில் வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் அவருடைய வழக்கறிஞர் முன்னிலையில், தாம் செலுத்த வேண்டிய அபராத தொகையை சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். ஆகையால் அவருடைய விடுதலையை உடனடியாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
