'சரியா ஒத்துழைக்கல'... 'ஆண்களின் பிறப்புறுப்பை'... அறுத்த 'சைக்கோ'வின் பகீர் வாக்குமூலம் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jun 13, 2019 10:44 AM
சென்னையை கடந்த சில நாட்களாக அதிரச் செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.தன்பால் சேர்க்கைக்குக்கு இணங்காததால்,இது போன்ற கொடூர செயலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

கடந்த மாதம் 25-ம் தேதி அஸ்லாம் பாஷா என்பவரும், கடந்த இரண்டாம் தேதி நாராயண பெருமாள் என்பவரும்,அவர்களின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், ரெட்டேரி மேம்பாலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டனர்.தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இருவரில் அஸ்லாம் பாஷா உயிரிழந்து விட,நாராயண பெருமாள் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே நடந்த சம்பவத்திற்கு காரணமானவரை கைது செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
இந்நிலையில் நாராயண பெருமாளிடம் நடத்திய விசாரணையில்,குற்றவாளியின் அடையாளங்கள் குறித்த சில தகவல்களை தெரிவித்தார்.இதையடுத்து ரெட்டேரி மேம்பாலம்,மாதவரம், ராஜாமங்கலம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில்,8 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 40 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் ஒரு நபரின் அடையாளம் மட்டும் நாராயண பெருமாள் கூறியதோடு பொருந்தி போனது.இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்,குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே குற்றவாளி குறித்து ஒருவர் துப்பு கொடுத்த நிலையில்,வில்லிவாக்கம் மீன் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்த முனுசாமி என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மானாமதுரையைச் சேர்ந்த இவர்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார்.இதற்கிடையே காவல்துறையினரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் ''தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், தன்பால் சேர்க்கையின்போது தமக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் இருவரின் மர்ம உறுப்பையும் அறுத்ததாக பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
தன்பால் சேர்க்கை குறித்து கூற தயங்கி, தனிப்பட்ட காரணங்களால் மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக,பாதிக்கப்பட்ட இருவரும் தெரிவித்ததால் விசாரணையில் தோய்வு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் சிசிடிவி கேமராக்கள் விசாரணையில் முக்கிய பங்கு வகித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
