ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் கச்சோரி எனப்படும் உணவு மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளே மசாலாவுடன் கிட்டத்தட்ட போண்டா மாதிரி செய்யப்படும் இந்த பதார்த்தத்திற்கு கிராக்கியும் அதிகம். அப்பகுதிக்கு செல்பவர்கள் பலரும் இந்த புகழ்பெற்ற கச்சோரியை ருசிக்க விரும்புவார்கள். இதன் ருசிக்கு அடிமையான காரணத்தால் 5 ஊழியர்களை பணி இடை நீக்கம் செய்திருக்கிறது ராஜஸ்தான் ரயில்வே நிர்வாகம்.
அல்வார் பகுதியில் உள்ள தவுத்பூர் கிராஸிங்கில் இந்த புகழ்பெற்ற கச்சோரியை வாங்க ஓட்டுநர் ஒருவர் ரயிலையே நிறுத்திய சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் ஹாட் டாபிக்.
ரயிலை நிறுத்திய ஓட்டுநர்
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒருவர் கையில் பையுடன் ரயில்வே கிராஸிங் அருகே நிற்கிறார். சரியாக ரயில் வரும் நேரம் பார்த்து டிராக்கை நோக்கி நடந்து செல்லும் அந்த நபரின் அருகே வந்ததும் ரயிலும் நிற்கிறது. அதன்பிறகு, என்ஜின் அறையில் இருந்து யாரோ அந்த நபரிடம் இருந்த கச்சோரி பையினை வாங்குகிறார்கள். அதன்பிறகு ரயில் கிளம்புகிறது.
தினந்தோறும் இந்த சம்பவம் இங்கே நடப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கச்சோரி வாங்க ரயிலை ஓட்டுநர் நிறுத்திய இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடவடிக்கை
இந்த வீடியோ வைரல் ஆனதால், பொறுப்பின்றி செயல்படும் ரயில்வே ஊழியர்களை நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர். இந்த விஷயம் ராஜஸ்தான் ரயில்வே மேலதிகாரிகளின் காதுகளை எட்டி இருக்கிறது.
இதனை அடுத்து 5 பேரை பணி இடை நீக்கம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு லோக்கோ பைலட்டுகள், இரண்டு ரயில்வே கேட் பணியாளர்கள், ஸ்டேஷன் கண்காணிப்பாளர் ஆகிய ஐந்து பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கச்சோரி வாங்க ரயிலையே ஓட்டுநர் நிறுத்திய வீடியோ தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
@AshwiniVaishnaw @RailMinIndia @GMNWRailway @DRMJaipur @drm_dli
यह वीडियो एकwhatsappग्रुप के माध्यम से आज ओर अभी देखने को मिला है
क्या यह रेलवे नियमानुसार सही है अगर गलत है तो एक्शन लीजिए और सम्बंधित सभी व्यक्तियों पर कार्यवाही करें@vishalmrcool @JAGMALSINGH_MON @vasudhoot pic.twitter.com/Tw5dtkozzn
— NARENDRA KUMAR JAIN (@NarendraJainPcw) February 18, 2022