சவுண்டு வராம சுவர்ல 'ஓட்ட' போடுவது எப்படி...? 'YOUTUBE-ல் பார்த்த வீடியோ...' ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையில் 'திடுக்கிட' வைக்கும் 'ஷாக்' தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 22, 2021 01:57 PM

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ஆம் தேதி இரவு, பின்பக்க சுவற்றை துளையிட்டு கொள்ளை நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து தளங்கள் கொண்ட இந்த நகை கடையில் சுமார் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

robbers confessed vellore Jos Alukkas Jewelery after watch YouTube

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அவ்வளவு பெரிய நகைக்கடையில் உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் ஸ்பிரே அடித்து, சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து நகைகளைத் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதோடு தனிப்படை போலீசார் சுமார் 5 நாட்களில் கொள்ளையர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டுள்ளனர்.

இதுக்குறித்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், 'வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்திருந்தது.

குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரை டிசம்பர் 20-ஆம் தேதி பிற்பகல் ஒடுகத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் செய்த விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொள்ளையடித்த சுமார் 16 கிலோ தங்கம் நகைகள் கைப்பற்றப்பட்டது' எனக் கூறியுள்ளார்.

'இந்த நகைக் கடையில் திருடர்களை குறித்து எச்சரிக்கும் அலாரம் இருந்தும் அது வேலை செய்யவில்லை. மற்றொரு பெரிய தவறு சிசிடிவி கேமரா வெறும் கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்தி எளிதில் பின் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்துள்ளார்.

அதோடு, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர் ஒரு கட்டட தொழிலாளி என்பதால் 10 நாட்கள் பொறுமையாக திட்டமிட்டுள்ளார்.  ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'கடையின் உள்ளே 'சப்தமின்றி துளையிடுவது எப்படி' என்றும், இதற்கு முன் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றியும் ஆராய்ந்து அந்த தவறுகள் கொள்ளையடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக 'யூடியூபில்' உள்ள காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டதாக குற்றவாளிகள் தெரிவித்தனர்' எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர்-21) பிற்பகல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் ரோஸ் கலா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி, 'என்னைக் கைது செய்தது என் பெற்றோருக்கு தெரியும். ஆனால், எனக்கு அவர்களது துணை இல்லை. என்னை ஜாமினில் எடுக்க யாரும் வரமாட்டார்கள். எப்போது என்னை வெளியே விடுவீர்கள்' என நீதித்துறை நடுவரிடம் விவாதித்துள்ளார். மற்றொருவர் சிவ பக்தர் என்பதால் ஒரு ருத்திராட்சை மாலையை மட்டும் கழுத்தில் அணிந்துக்கொண்டு மற்ற நகைகளை சுடுகாட்டில் வைத்துள்ளார்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #ROBBERS #VELLORE #JOS ALUKKAS #JEWELERY #YOUTUBE #யூடியூப் #வேலூர் #ஜோஸ் ஆலுக்காஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Robbers confessed vellore Jos Alukkas Jewelery after watch YouTube | Tamil Nadu News.