'கால்'ல பசங்க போடுற செருப்பு...! 'பர்தா' உள்ள ஆணா? பொண்ணா...? 'இதுக்கு பின்னால ஏதோ பெரிய விஷயம் இருக்கு...' - கடைசியில் தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அன்பழகன் என்பவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த காரணத்தினாலேயே இவர் தனக்கு திருமணம் ஆனதை யாரிடமும் சொல்லாமல் வந்துள்ளார்.

அன்பழகனுக்கும், வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பிரிவில் வேலை செய்யும் 19 வயது இளம்பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய காதலிக்கு சப்ரைஸ் தர நினைத்து, நேற்று முன்தினம் (19-10-2021) இரவு 10 மணியளவில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சென்றுள்ளார். தன் காதலி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் வெகு நேரமாக காத்திருந்ததோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்துள்ளார்.
வடிவேலு காமெடியில் வருவது போல மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்து ஆண்கள் உபயோகப்படுத்தும் செருப்பை அணிந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் என்னடா இது என்று நினைத்து பர்தாவில் இருந்த அன்பழகனை, 'யார் நீ ? எந்த ஊர்? எனக் கேட்டு பர்தாவை அவிழ்க்குமாறு கூறியுள்ளனர்.
மாட்டினால் தர்ம அடி நிச்சயம் என நினைத்து கொண்ட அன்பழகன் ஏதும் பதிலளிக்காமல் இருந்துள்ளார் ஆனால், அப்பகுதி மக்கள் திருடன் தான் பர்தாவில் வந்துள்ளான் என நினைத்து அன்பழகன் நினைத்த அதே சரமாரியாக தர்ம அடியை கொடுத்து போலீசாரிடமும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பழகனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் அவருக்கு திருமணம் ஆன விஷயமும், தன்னுடைய காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த இடத்தில் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்ட விஷயத்தையும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
