கல்யாணம் ஆகி 17 வருஷத்துக்கு அப்பறம் மனைவி மீது வந்த சந்தேகம்.. கணவர் செஞ்ச காரியத்தால் கலங்கிப்போன உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை கணவரே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிபவர் சுலைமான். 40 வயதான இவர் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சுலைமான் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
அதிர்ச்சி
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வேலை முடித்து வீடு திரும்பிய சுலைமான், தனது மனைவியுடன் சந்தேகத்தின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. இதனிடையே கோபமடைந்த சுலைமான் தனது மனைவியை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் வீட்டுக்கு உள்ளேயே மயங்கி விழுந்த சுலைமானின் மனைவி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மனைவி மரணமடைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சுலைமான், அங்கு இருந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வோம் என அஞ்சி, அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
விசாரணை
இதனிடையே, இது குறித்து ராணிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுலைமானை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்ததுடன், உயிரிழந்த அவரது மனைவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சுலைமானிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டையில் திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து, மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கணவரே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
