அடேங்கப்பா.. 2021-ல் மட்டும் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் இவ்வளவு பேரா? முந்தைய வருடங்களை விட அதிகம்.

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Jul 19, 2022 10:47 PM

கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2021ல் வெளிநாட்டு குடியுரிமைக்கு மாறிய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

1.63 lakh Indians gets citizenship in 2021 US, Aus

பலருக்கும் வெளிநாடு செல்லும் கனவு இருக்கும். இன்னும் பலர் வெளிநாட்டில் வேலை வாங்கி பூர்வீகமாக அங்கேயே செட்டில் ஆகி விடுவது உண்டு. தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் இருந்து சென்ற பின்பு வெளிநாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பலரையும்தான் இந்திய வம்சாவளி என்று சொல்கிறோம்.

இவர்களில் பெரும்பாலும் இந்திய குடியுரிமை என்கிற, இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இந்திய குடிமகன் என்கிற அந்தஸ்தை துறந்தவர்களாக இருப்பார்கள். இந்தியாவில் இருந்தபடி வெளிநாட்டிலும் குடியுரிமை அல்லது கோல்டன் விசா பெற்றவர்களை தவிர்த்து, இந்திய குடியுரிமையை முற்றிலும் துறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தங்கி விட்டவர்களும் உண்டு.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து இந்திய குடியுரிமையை முற்றிலுமாக துறந்தவர்களின் எண்ணிக்கை 44,000 ஆக இருக்கிறது. இதேபோல் 2020 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை முற்றிலுமாக துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழத் தொடங்கியவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 256 ஆக இருக்கிறது.‌

இந்த நிலையில் தான் 2021-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை முற்றுமுழுக்க துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ தொடங்கியவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய இணை அமைச்சர் தற்போது தெரிவித்திருக்கிறார்.‌

அதன்படி 2021-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து முற்றுமுழுக்காக இந்திய குடியுரிமையை துறந்து US, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 370 என்று மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்திருக்கிறார்.

Tags : #OVER 1.63 LAKH INDIANS GAVE UP CITIZENSHIP IN 2021; US #AUS TOP DESTINATIONS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 1.63 lakh Indians gets citizenship in 2021 US, Aus | India News.