திறந்து கிடந்த வீட்டின் கதவு.. "எல்லா இடத்துலயும் மிளகா தூள் வேற போட்டுருக்காங்க.." பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரம், எம்.டி. ஆர் நகரைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன் (வயது 72). இவரது மனைவி ஜோதிமணி (65).

Also Read | ஓடுற வண்டி'ல Push Ups.. "கெத்து காட்டுறதா நெனச்சி, கடைசி'ல.." நிலை குலைய வைத்த அதிர்ச்சி
சங்கர பாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவருமே ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகனான சதீஷ், சென்னை வேளச்சேரி பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டில், சங்கர பாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தனியாக வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், தனது பெற்றோர்களை அவ்வப்போது ஊருக்கு வந்து பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சதீஷ்.
அதே போல, அருகேயுள்ள உறவினர்கள், அடிக்கடி சங்கர பாண்டியன் வீட்டிற்கு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் சில உறவினர்கள் அங்கே செல்லும் போது, சங்கரபாண்டியனின் வீடு திறந்து கிடந்துள்ளது. தொடர்ந்து, உள்ளே சென்ற அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, இருவரின் உடல்களையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு பேர் உடலிலும் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது தெரிய வந்தது. மேலும், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததும், வீடு முழுவதும் மிளகாய் பொடியை மர்ம நபர்கள் தூவிச் சென்றதும் தெரிய வந்தது. வீட்டில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு கிடந்ததால், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜோதிமணியின் செயின் மற்றும் கம்மலைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள தடயங்கள் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கொள்ளை அடிக்க இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது பற்றியும் முழுமையாக விசாரித்த பின்னரே தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இரண்டு ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், ராஜபாளையம் பகுதியில் இதே பாணியில் கொலை ஒன்று நடந்துள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அங்கும் இதே போன்று, 60 வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, கொலை செய்து, பின் மிளகாய் பொடி தூவி, கொள்ளை அடித்து வந்ததும் கூறப்படுகிறது.
Also Read | "ஊருல மழையே இல்ல.." புகார் கொடுத்த விவசாயி.. "யார் மேல Complaint'ன்னு பாத்தா.." பரபரப்பை உண்டு பண்ணிய கடிதம்

மற்ற செய்திகள்
