மின்கட்டண உயர்வு.. "பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம்.. இதான் கடைசி தேதி".. அமைச்சர் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், பொதுமக்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதில், 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித மாறுபாடும் இருக்காது எனவும், இந்த மானியத்தை மக்கள் விரும்பினால் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், 42 சதவீத வீடுகளுக்கு மின்சார கட்டணத்தில் மாறுதல் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மின்சார கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,"தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவர தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. ஆகவே 101 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இருப்பினும் ஏற்கெனவே வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியமும் தொடரும்" என்றார்.
கருத்து தெரிவிக்கலாம்
மேலும், மின்சார கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என அமைச்சர் செய்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். பொதுமக்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையத்தில், தங்களது கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் கருத்துகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
